LeisureWorld Water Park
இலங்கையில் அமைந்துள்ள ஒரேயொரு பெரிய advencher park ஆகும்.இது அவிசாவளையில் அமைந்துள்ளது.high level வீதியில் அமைந்திருப்பதால் எல்லோரும் இலகுவாகச் செல்லலாம். இங்கு பெரியவர் முதல் சிறியவர் வரை விளையாடி மகிழக்கூடிய விளையாட்டுக்கள் காணப் படுகின்றன.தரை விளையாட்டுக்கள் வேறாகவும் நீர் விளையாட்டுக்கள் வேறாகவும் உள்ளன.இலங்கையில் எந்தப் பாகத்தில் உள்ளவர்களும் இலகுவாகச் செல்லக் கூடிய இடமாகும்.
தரைப் பகுதியில் எண்ணற்ற விளையாட்டுக்களையும் ,நீர்ப் பகுதியில் படகுச்சவாரி, செயற்கை ஆறு,செயற்கைக்கடல்,சிறுவர் நீர் விளையாட்டுப் பகுதி, பெரியவர் நீர் விளையாட்டுப் பகுதி என பலவற்றைக் காணலாம்.ticket prices காணொளியில் உள்ளன. ஒரு நாள் முழுவதும் நிற்பதன் மூலம் தரை, நீர் விளையாட்டுக்கள் முழுவதையும் விளையாடி மகிழக் கூடியதாக இருக்கும். திறந்திருக்கும் நேரம் மு.ப 9.00 – பி.ப 5.00 மணிவரையாகும்.இருப்பினும் 11.00 மணிக்கே நீர் விளையாட்டுப் பகுதி திறக்கும். எனவே நேரத்துடன் நீங்கள் சென்றால் தரை விளையாட்டை முடித்த பின் நீர் விளையாட்டிற்குச் செல்லல் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்தக் கூடியதாய் அமையும்.அல்லது நேரம் போதாமல் போகும். செயற்கைக் கடல் பி.ப 4.00மணியளவிலேயே திறக்கும்.
உணவு அருந்துவதற்கு ஏற்ற வகையில் பல food courts காணப்படுகின்றன. இவை தவிர game center ஒன்றும் உள்ளது.இங்கு இணைக்கப் பட்ட காணொளியில் முழு விபரத்தையும் காணலாம்.