Negombo Sunday Street Market | நீர்கொழும்பு ஞாயிறு தெருவோரச் சந்தை
நீர்கொழும்பின் தெருவோரச் சந்தை நீர்கொழுப்பு கடற்கரை ஓரமாக இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அமைந்துள்ளது. இவை ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே கூடுகின்றது. இவற்றை மக்கள் தவறவிட்டால் மரக்கறிகளை எளிதில் பெறுவது என்பது இயலாத காரியம். முன்பு சந்தைக் கட்டிடத் தொகுதி காணப்படாத போதும் இந்த ஞாயிற்றுக்கிழமை சந்தை களையே மக்கள் பெரிதும் நம்பி மரக்கறிகளைப் பெற்றுக்கொண்டனர். ஆனால் இப்போது இன்னொரு பகுதியாக சந்தைக் கட்டிடத் தொகுதிகள் எந்நாளும் திறந்திருக்கும். திங்கள் கிழமை நாளில் ஒருநாள் கூடுவதால் என்னவோ மரக்கறிகளும் பழங்களும் நியாயமான குறைவான விலையில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
நீர்கொழும்பின் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்வீர்கள் ஆனால் இவ்விடத்தை நீங்கள் பார்த்துப்பொருட்களை வாங்கி மகிழலாம்.